காரமடை அருகே அரச வேப்ப மரத்திற்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
காரமடை அருகே அரச-வேப்ப மரத்திற்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
காரமடை
கோவை மாவட்டம் காரமடை அருகே தோலம்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகே அரச மரமும், வேப்ப மரமும் உள்ளது. இதனை கிராம மக்கள் பராமரித்து வருகின்றனர். பழமையான இந்த மரங்களுக்கு கிராம மக்கள், மக்கள் நலனுக்காக வேண்டி பூஜை செய்து திருமணம் செய்து வைத்தனர்.
இதில், அரச மரத்தை சிவனாகவும், வேப்ப மரத்தை பார்வதியாகவும் பாவித்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதன்படி, நேற்று முன்தினம் 7-ந் தேதி மாலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை சிறப்பு பஜனைகளும், நலன் குன்னி என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை கிராம மக்கள் 2 குழுவாக பரிந்து ஒரு குழுவினர் பெண் வீட்டாராகவும், ஒரு குழுவினர் மாப்பிள்ளை வீட்டாராகவும் வந்தனர்.
அவர்கள் ஊர் கவுடர் வீட்டில் இருந்து சீர் முறை மற்றும் முளைப்பாரி எடுத்து விநாயகர் கோவில் வந்தனர். பின்னர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக 10.30 மணிக்கு பஸ் நிறுத்தம் அருகே வந்தனர். தொடர்ந்து அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடத்தி வைத்தனர். இந்த கல்யாண நிகழ்ச்சியில் தோலம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த திருமணத்தை நடத்தி வைப்பதன் மூலம் கிராமத்தில் திருமணமாகாத ஆண்கள், பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் பெறவும், மழை பெய்து விவசாயம் செழித்து கிராமம் பொருளாதார வளர்ச்சி அடையும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story