ஈரோடு கோர்ட்டில் அமைச்சர் சு.முத்துசாமி ஆஜர்
ஊரடங்கை மீறியதாக போடப்பட்ட வழக்கில் அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.
ஊரடங்கை மீறியதாக போடப்பட்ட வழக்கில் அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.
ஊரடங்கை மீறியதாக வழக்கு
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி சிலை உள்ளது. இந்த சிலைக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து ஈரோடு டவுன் போலீசார், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி உள்பட 10 பேர் மீது கொரோனா ஊரடங்கு தடையை மீறியதாகவும், நோய் தொற்று பரவும் வகையில் செயல்பட்டது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அமைச்சர் ஆஜர்
இந்த வழக்கு அ.தி.மு.க. ஆட்சியின்போது போது போடப்பட்டது ஆகும். இந்த வழக்கின் மீதான விசாரணை ஈரோடு 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. இதற்காக தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான சு.முத்துசாமி உள்ளிட்ட 10 போ் நேற்று காலை ஈரோடு கோர்ட்டில், மாஜிஸ்திரேட் வடிவேல் முன் ஆஜரானார்கள்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story