கோட்டூரில் தி.மு.க.வினர் முற்றுகை
கோட்டூரில் தி.மு.க.வினர் முற்றுகை
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே கோட்டூர் மலையாண்டிபட்டிணத்தில் இருந்து ஆழியாறு செல்லும் சாலையில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகில் மதுபான பார் அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் அதிக விலைக்கு தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில் விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
இதை தொடர்ந்து கோட்டூர் நகர தி.மு.க.வினர் அனுமதியின்றி செயல்படும் மதுபான பாரை உடனடியாக மூடக் கோரி பாரை நேற்று முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதை தொடர்ந்து அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதியின்றி செயல்பட்ட 58 மதுபான பார்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story