பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு: ரோட்டில் விழுந்த ராட்சத பாறைகள் வெடி வைத்து அகற்றம்


பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு: ரோட்டில் விழுந்த ராட்சத பாறைகள் வெடி வைத்து அகற்றம்
x
தினத்தந்தி 9 Nov 2021 10:19 PM IST (Updated: 9 Nov 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. ரோட்டில் விழுந்த ராட்சத பாறைகள் வெடி வைத்து அகற்றப்பட்டன.

அந்தியூரில் இருந்து மைசூருக்கு செல்லும் பர்கூர் மலைப்பாதை ரோட்டில் செட்டிநொடி, நெய்கரை ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணி அளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் ராட்சத பாறைகள் உருண்டு வந்து ரோட்டில் விழுந்தன. இதனால் பர்கூர் மலைப்பகுதியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என 2 மாநிலங்களுக்கும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாைலத்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரோட்டில் விழுந்து கிடந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 2 இடங்களிலும் தலா 100 டன் எடை கொண்ட பாறைகள் கிடந்ததால் அவைகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 
இந்த நிலையில் அந்த பாறைகள் ெவடி வைத்து உடைக்கப்பட்டு பின்னர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் நேற்று மாலை 4.30 மணி அளவில் அகற்றப்பட்டது. இதனால் 26 மணி நேரத்துக்கு பின்னர் வாகன போக்குவரத்து தொடங்கியது. 
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வீட்டுவசதி துறை அமைச்சர்.சு.முத்துசாமி அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், கோபி ஆர்.டி.ஓ.பழனி தேவி, அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மண் சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
மேலும் நெய் கரை என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதில் ரோட்டில் விழுந்த மரங்களை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
1 More update

Next Story