மேலும் ஒரு மாணவன் உடல் மீட்பு


மேலும் ஒரு மாணவன் உடல் மீட்பு
x
தினத்தந்தி 10 Nov 2021 12:29 AM IST (Updated: 10 Nov 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

மேலும் ஒரு மாணவன் உடல் மீட்பு

வாடிப்பட்டி, 
திருப்பூரை சேர்ந்த கண்ணன் மகன் விஸ்வநாதன் (வயது 21). சி.ஏ. படித்து வந்தார். சிவகுமார் மகன் அருள் வசந்த் (18) பிளஸ்-2 படித்து வந்தார். இருவரும் மதுரை மாவட்டம் பரவையில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக உறவினர் வீட்டுக்கு வந்தனர். 
அப்போது  விளாங்குடியை சேர்ந்த சரவணகுமார் (19) என்பவருடன் பரவை-துவரிமான் வைகை ஆற்று பாலம் அருகில் குளித்த போது விஸ்வநாதனும், அருள் வசந்தும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். தல்லாகுளம், திடீர்நகர், சோழவந்தான் ஆகிய 3 தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் இளைஞர்கள் உள்பட 53 பேர் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று முன்தினம் கோச்சடை அருகே அருள் வசந்த் உடல் மீட்கப்பட்டது. 
இந்த நிலையில் நேற்று காலை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் விஸ்வநாதன் உடலும் மீட்கப்பட்டது.

Related Tags :
Next Story