ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது
மதுரை,
மதுரையில் 9 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி
மதுரை அவனியாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை செல்வம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அவனியாபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காவேரி நகரில் உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு 23 சாக்கு மூடைகளில் 8,230 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 1,500 கிலோ உடைந்த அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசி மற்றும் 3 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
4 பேர் கைது
இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மாரிச்செல்வம், மணிகண்டன் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் முகமதுஜாகீர்அலி, செல்வகுமார் ஆகியோர் என்பதும், அவர்கள் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சந்தானம் என்பவரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story