வாலிபர் கொலையில் 4 பேர் கைது


வாலிபர் கொலையில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2021 12:41 AM IST (Updated: 10 Nov 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் கொலையில் 4 பேர் கைது

சோழவந்தான், 
சோழவந்தான் அருகே வாலிபர் ெகாலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். 
வாலிபர் கொலை 
சோழவந்தான் அடுத்த கரட்டுப்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் ரோஷன்குமார் என்ற கோட்டைச்சாமி(வயது 24). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவரை மர்ம நபர்கள் கொலை செய்து கிணற்றில் கல்லை கட்டி உடலை போட்டு சென்றனர். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக மர்மநபர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 
4 பேர் கைது 
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சோழவந்தான் கரட்டுபட்டியை சேர்ந்த சுபாஷ், ஜெயசூர்யா, நாச்சிகுளம் பூவேந்திரன், கரட்டுப்பட்டி சிவா ஆகிய 4 பேரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். 
மேலும் அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். ைகதான 4 பேரும் கொலையுண்ட கோட்டைச்சாமியின் கூட்டாளிகள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாராட்டினார். 

Related Tags :
Next Story