ஆயுதங்களுடன் சுற்றிய 2 வாலிபர்கள் கைது
ஆயுதங்களுடன் சுற்றிய 2 வாலிபர்கள் கைது
மதுரை,
மதுரை அவனியாபுரம் போலீசார் எம்.எம்.சி.காலனி பகுதியில் சென்ற போது வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டு ஓடினார். அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது மேலஅனுப்பானடியை சேர்ந்த காளீஸ்வரன் (வயது 34) என்பதும், அவரிடம் கத்தி இருப்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் முத்துப்பட்டி பெருமாள் நகர் பகுதியில் சென்ற போது சந்தேகப்படும் படியாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (20) என்பதும், அவரிடம் கத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story