வால்பாறையில் ஆறுகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
வால்பாறையில் ஆறுகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
வால்பாறை
வால்பாறையில் பரவலாக மழை பெய்து வருவதால் ஆறுகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வால்பாறையில் மழை
மலைப்பிரதேசமான வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இவர்கள் அங்குள்ள சோலை யாறு அணை, கூழாங்கல் ஆறு, தேயிலை எஸ்டேட் பகுதிகள் உள் பட பல்வேறு சுற்றுலா மையங்களை பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக இங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஆறுகளில் குளிக்க தடை
ஆனால் இது தெரியாமல் இங்கு குவியும் சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, வெள்ளமலை ஆறு ஆகிய ஆறு களுக்கு சென்று அங்கு இறங்கி குளிக்கிறார்கள்.
இந்த ஆறுகளில் திடீரென்று நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், ஆறு களுக்கு செல்லவும், அவற்றில் இறங்கி குளிக்கவும் சுற்றுலா பயணி களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக வெள்ளமலை எஸ்டேட் டனல் ஆற்றுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க அங்கு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளன. ஆனால் சுற்றுலா பயணிகள் அந்த தடுப்புகள் மீது ஏறி குதித்து ஆற்றுக்கு சென்று குளிக்கிறார்கள்.
தீவிர கண்காணிப்பு
இந்த பகுதி ஆட்கள் நடமாட்டம் இல்லாதது ஆகும். திடீரென்று ஆற்றில் தண்ணீர் அதிகரித்தால் தப்பிக்க வாய்ப்பு இல்லை. எனவே தடையை மீறி ஆற்றுக்குள் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
தற்போது வால்பாறை பகுதியில் பலத்த மழை பெய்யாவிட்டா லும், பரவலாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக எந்த நேரத்திலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நீர்நிலைகளில் இறங்கி குளிக்க வேண்டாம்.
எனவே அனைத்து நீர்நிலைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடும் நடவடிக்கை
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எந்த சுற்றுலா மையங்களுக்கு சென்றாலும் அதை பார்த்து ரசித்து விட்டு செல்ல வேண்டும்.
மாறாக ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படக்கூடாது. தடையை மீறி ஆறுகளில் இறங்கி குளிப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story