பண்ணாரி கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை ரூ.1 கோடியே 5¼ லட்சம்


பண்ணாரி கோவில் உண்டியலில்  பக்தர்கள் காணிக்கை ரூ.1 கோடியே 5¼ லட்சம்
x
தினத்தந்தி 10 Nov 2021 5:38 PM GMT (Updated: 2021-11-10T23:08:27+05:30)

பண்ணாரி கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.1 கோடியே 5¼ லட்சம் செலுத்தியிருந்தார்கள்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 18 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. 
கோவில் துணை ஆணையர் கூடுதல் பொறுப்பு சபர்மதி மற்றும் இந்து அறநிலைய ஈரோடு உதவி ஆணையர் அன்னக்கொடி -முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
உண்டியல்களில் பக்தர்கள் மொத்தம் 1 கோடியே 5 லட்சத்து 35 ஆயிரத்து 535 ரூபாயை காணிக்கையாக செலுத்தி இருந்தார்கள்.  மேலும் ஒரு கிலோ 190 கிராம் தங்கம், ஒரு கிலோ 175 கிராம் வெள்ளியும் இருந்தது. காணிக்கை எண்ணும் பணியில் பரம்பரை அறங்காவலர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

Next Story