தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
தெருநாய்கள் தொல்லை
கோத்தகிரி நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டு, பொதுமக்களையும் கடிப்பதற்காக துரத்தி வருகிறது. எனவே தெரு நாய்களைக் கட்டுப்படுத்த சம்பந்தபட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயகுமார், கோத்தகிரி.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
கோத்தகிரி மார்க்கெட் பிரதான நுழைவு வாயில் முதல் மார்க் கெட் உள்புறமாக புயல் நிவாரண கூடம் செல்லும் நடை பாதையை ஆக்கிரமித்து காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் இங்கு செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ரவி, கோத்தகிரி.
வாகன ஓட்டிகள் அவதி
பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே பாலத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
சிவா, சூளேஸ்வரன்பட்டி.
சுகாதார சீர்கேடு
பொள்ளாச்சி-கோவை ரோடு தில்லை நகர் பகுதியில் சாலை யோரத்தில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் மழைக்காலம் என்பதால் கொசுக் கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
ரவி, பொள்ளாச்சி.
தண்ணீர் தேங்கும் சாலை
ஊட்டியில் இருந்து மார்லிமந்து வழியாக கோழிப்பண்ணைக்கு தார் சாலை செல்கிறது. இந்த தார்சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் குழி இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
ஷீலா, ஊட்டி.
விபத்தை ஏற்படுத்தும் மரம்
பொள்ளாச்சி வால்பாறை ரோடு வஞ்சியபுரம் பிரிவில் சாலையோரத்தில் ஒரு மரம் உள்ளது. அந்த மரம் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், பொள்ளாச்சி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுசம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நேகா, கோட்டைமேடு.
கட்டிட கழிவுகள்
கிணத்துக்கடவு அண்ணாவீதியில் கட்டிட கழிவுகள் கொட்டப் பட்டு வருகிறது. இதனால் இந்த பாதை மிகவும் குறுகி 10 அடியில் இருந்து 5 அடியாக மாறிவிட்டது. எனவே வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும்.
தினேஷ்குமார், கிணத்துக்கடவு.
குண்டும்-குழியுமான சாலை
கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலை யில், சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் இருந்து நொய்யல் ஆற்று பாலம் வரை சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே பழுதான சாலையை சரிசெய்ய வேண்டும்.
மோகனன், போத்தனூர்.
சேறும்-சகதியுமாக மாறிய வீதி
அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி கூத்தாண்டவர் கோவில் வீதி மழை காரணமாக சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இதனால் இந்த வழியாக நடந்துகூட செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே இந்த வீதியில் கான்கிரீட் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
செல்வன், கஞ்சப்பள்ளி.
குப்பைகளை அகற்ற வேண்டும்
கோவை உக்கடம் காய்கறி மார்க்கெட் 2-வது நுழைவுவாயில் அருகே குப்பைகள் மலைபோன்று குவிந்து கிடக்கிறது. இதன் அருகில்தான் மாநகராட்சி சுகாதார மண்டல அலுவலகம் இருக்கிறது. அங்கு வரும் அதிகாரிகள் இந்த குப்பைகளை கண்டுகொள்வது இல்லை. குப்பைகள் அதிகமாக இருப்பதால் அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற வேண்டும்.
விஜய், உக்கடம்.
விபத்தை ஏற்படுத்தும் ரோடு
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி பாரதி ரோடு மிகவும் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் அடிக்கடி விபத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிம் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்தை ஏற்படுத்தி வரும் இந்த சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
சுந்தரேசன், செல்வபுரம்.
Related Tags :
Next Story