3 போலீஸ் உதவி கமிஷனர்கள் இடமாற்றம்


3 போலீஸ் உதவி கமிஷனர்கள் இடமாற்றம்
x
3 போலீஸ் உதவி கமிஷனர்கள் இடமாற்றம்
தினத்தந்தி 10 Nov 2021 11:22 PM IST (Updated: 10 Nov 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

3 போலீஸ் உதவி கமிஷனர்கள் இடமாற்றம்

கோவை

கோவை மாநகர போலீசில் குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு என இரு பிரிவுகளாக இருந்தது. இதற்கு தனித்தனியாக உதவி கமிஷனர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் குற்றச்சம்பவங்களை குறைப்பதற்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை குறைப்பதற்கும் மாநகர போலீசில் சரகம் வாரியாக பிரிக்கப்பட்டு உதவி கமிஷனர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர்.

அதில் கோவை குனியமுத்தூர் போலீஸ் சரகத்தில் உதவி கமிஷனராக பணியாற்றி வந்த வின்சென்ட், காட்டூர் சரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதுபோன்று காட்டூர் சரக உதவி கமிஷனர் சதீஷ்குமார் போத்தனூர் சரகத்துக்கும், போத்தனூர் சரக உதவி கமிஷனர் ரகுபதி ராஜா குனியமுத்தூர் சரகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை சென்னை டி.ஜி.பி. அலுவலகம் பிறப்பித்துள்ளது.

Next Story