புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x
தினத்தந்தி 10 Nov 2021 11:43 PM IST (Updated: 10 Nov 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகாா் பெட்டி

தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் 

கவுந்தப்பாடி-பவானி பிரதான சாலையில் பாலம் உள்ளது. ஆனால் இந்த பாலத்துக்கு தடுப்புச்சுவர்கள் இல்லை. இதனால் அந்த வழியாக இரவு நேரத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அருகே உள்ள ஓடையில் தவறி விழுந்து விடும் ஆபத்து உள்ளது. எனவே பாலத்தில் தடுப்புச்சுவர் கட்ட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோ.வீரக்குமாரன், கவுந்தப்பாடி


கம்பி வலை அமைக்கப்படுமா? 

  ஆப்பக்கூடல் ஏரி அருகே உள்ளது வெள்ளாளபாளையம். இங்குள்ள தெருவில் 30 அடி ஆழ கிணற்றில் 15 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஆனால் இந்த கிணற்றின் மேல் கம்பி வலை அமைக்கப்படவில்லை. இதனால் சிறுவர்-சிறுமிகள் எட்டிப்பார்க்கும் போது கிணற்றுக்குள் தவறி விழுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே உடனே கிணற்றுக்கு மேல் கம்பி வலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  குரு செம்பன், ஜம்பை
  
குண்டும், குழியுமான சாலை

  ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள நாச்சியப்பா வீதியில் இருந்து சவீதா பஸ் நிறுத்தம் நோக்கி செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர். உடனே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், ஈரோடு
  
வீணாகும் குடிநீர்

  ஈரோடு திருநகர் காலனி தபால் நிலையம் எதிரே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. உடனே குடிநீர் குழாய் அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், திருநகர் காலனி
  
ஆபத்தான மின்கம்பம் 

  பவானிசாகர் தேசிபாளையம் அருகே கைக்காளன்குட்டை கிராமத்தில் மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. உடனே இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்கவோ அல்லது வேறு மின்கம்பம் நடவோ மின்வாரிய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
  பொதுமக்கள், கைக்காளன்குட்டை
  
ரோடு சீரமைக்கப்படுமா?

  நசியனூர் ஆவின் பாலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  எஸ்.ஜோசப், பெருந்துறை
  
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

  அந்தியூர் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா உள்ளது. கோபி, சத்தியமங்கலம், பவானி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் மற்றும் வாகனங்கள் ரவுண்டானாவை சுற்றி செல்ல வேண்டும். ஆனால் இங்குள்ள ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் சுற்றி செல்ல சிரமப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி ரோட்டோரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், அந்தியூர்
  -------------------


Next Story