கோவில் பூசாரிக்கு அரிவாள் வெட்டு
கோவில் பூசாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டை அருகே விளாச்சேரி வேளாளர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கீழக்குயில்குடி அருகே உள்ள கருப்புசாமி கோவிலில் பூசாரியாக உள்ள தனது மகன் ரஞ்சித்குமாருடன் விளாச்சேரிக்கு சென்றார். அப்போது எதிரே 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ரஞ்சித்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் ரஞ்சித்குமாருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story