தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை


தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 11 Nov 2021 1:48 AM IST (Updated: 11 Nov 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

12 வயது மகளை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்: 



மாணவி பலாத்காரம்
பழனி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தொழிலாளியின் 12 வயது மகள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தாள். இந்த நிலையில் மாணவியின் வயிறு பெரிதாக இருப்பதை அவருடைய தாய் கவனித்தார். இதையடுத்து மாணவியை அழைத்து சென்று பழனி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.
அப்போது மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மாணவியிடம், போலீசார் விசாரித்தனர். விசாரணையில், இரவில் தூங்கும் போது மாணவியை அவருடைய தந்தையே பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தந்தையை கைது செய்தனர்.

10 ஆண்டுகள் சிறை 
இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி புருஷோத்தமன் வழக்கை விசாரித்தார். இதற்கிடையே வழக்கு விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட மாணவியின் தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் இழப்பீடு வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story