தக்காளி கிலோ 70 க்கு விற்பனை
தக்காளி கிலோ 70 க்கு விற்பனை
கோவை
கோவையில் உள்ள மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
உழவர் சந்தை
கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம், சுந்தராபுரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், வடவள்ளி ஆகிய இடங்க ளில் உழவர் சந்தைகள் உள்ளன.
அங்கு, விவசாயிகள் தாங்கள் விளை விக்கும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட் மற்றும் டி.கே. மார்க்கெட்டில் சிறு வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி விற்பனை செய்கின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்யும் தொடர் மழை காரணமாக காய்கறிகள் அழுகி விடுகின்றன. மேலும் வரத்து குறைந்து உள்ளதால் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது.
தக்காளி கிலோ ரூ.70
ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் கடந்த வாரம் ரூ.50-க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.70-க்கு விற்கப்படுகிறது.
இதனால் சில்லரைக்கு விற்கும் கடைகளில், தக்காளி கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப் படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதேபோல் ரூ.40-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.50-க்கும், ரூ.55-க்கு விற்ற நாட்டு கத்திரிக்காய் ரூ.62-க்கும் விற்கப்படுகிறது.
அவரைக்காய் ரூ.34, புடலங்காய் ரூ.26, பீர்க்கங்காய் ரூ.42, சின்ன வெங்காயம் ரூ.38, பெரிய வெங்காயம் ரூ.44, உருளைக்கிழங்கு ரூ.50, பீட்ரூட் ரூ.48, காலிபிளவர் ரூ.50, பாகற்காய் ரூ.36-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில்,
மார்க்கெட்டுக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது. இந்த விலை உயர்வு ஒரு சில வாரங்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது. எம்.ஜி.ஆர். மார்க்கெட் சேறும், சகதியுமாக உள்ளது. அதை சீரமைக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story