குடியிருப்புக்குள் கழிவுநீர் புகுந்ததால் அவதி
குடியிருப்புக்குள் கழிவுநீர் புகுந்ததால் அவதி
கோவை
கோவை வாலாங்குளம் நிரம்பியதால் திருச்சி சாலை வழியாக உபரிநீர் சென்றது.
இதனால் அந்த தண்ணீர் பாதாள சாக்கடை வழியாக ராமநாதபுரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் வழியாக நொய்யல் ஆற்றில் மாநகராட்சி அதிகாரிகள் திருப்பி விட்டனர்.
அந்த நீரோட்டத் தில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதால் நஞ்சுண்டாபுரம் எஸ்.என்.வி. கார்டன் உள்ளிட்ட பகுதிகளுக்குள் கழிவுநீர் புகுந்தது.
இதனால் கடந்த 4 நாட்களாக சாக்கடை நீருடன், மழைநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்,
குளத்து நீரை பாதாள சாக்கடையில் திருப்பிவிட்டதால் இந்த பிரச்சி னை ஏற்பட்டு உள்ளது.
குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்ப தால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இது பற்றி கடந்த 4 நாட்களாக புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றனர்.
Reporter : M.ABULKALAMAZATH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore
Related Tags :
Next Story