தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Nov 2021 10:49 PM IST (Updated: 11 Nov 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி



தினத்தந்தி செய்தி எதிரொலி:
புதிய கழிப்பறை திறப்பு

பந்தலூர் அருகே கொளப்பள்ளி பயணியர் நிழற்குடைக்கு பின் புறம் கழிப்பறை சீரமைக்கப்படாமல் சுகாதாரமற்று காணப் பட்டது. அத்துடன் பூட்டியே கிடந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிகை்க எடுத்து புதிய கழிப்பறை கட்டப்பட்டு தற்போது திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனவே மக்களின் தேவை அறிந்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
ராஜ், பந்தலூர்.

தெருநாய்கள் தொல்லை

  ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் காந்தி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு தெருநாய்கள் கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் வட்டார கல்வி அலுவலகத்துக்கு வருகிறவர்கள் மற்றும் மைதானத்தில் விளையாடும் மாணவர்கள், இளைஞர்கள் அச்சம் அடைகின்றனர். எனவே, தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
  பரமசிவன், ஊட்டி.

ஆதார் மைய சேவை பாதிப்பு

  கூடலூர் தலைமை தபால் அலுவலகத்தில் கணினி பழுதடைந்து விட்டதால் ஆதார் மையத்தில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஏமாற்றத்து டன் திரும்பும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான கணினியை சரிசெய்ய வேண்டும்.
  ஆனந்த், கூடலூர்.

நடைபாதை ஆக்கிரமிப்பு

  ஊட்டி கமர்சியல் சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாதை உள்ளது. நடைபாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஆகவே, நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
  வெண்ணிலா, கோடப்பமந்து.

சேறும் சகதியுமாக மாறிய வீதி

  அன்னூர் சத்தி ரோட்டில் சூப்பர் மார்க்கெட் எதிரே உள்ள வீதி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக தினமும் பலர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகிறார்கள். ஆனால் இந்த வீதி சேறு நிறைந்து காணப்படுவதால், அவர்கள் நிலைதடு மாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துகளில் சிக்கி தவித்து வருகிறார்கள். எனவே இந்த வீதியில் உள்ள சேற்றை அகற்ற வேண்டும்.
  செந்தில்குமார், அன்னூர்.

பயணிகள் அவதி

  கிணத்துக்கடவு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் மேம்பாலம் வழியாக பொள்ளாச்சி சென்று வருகிறது. இதனால் கிணத்துக் கடவில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விரைவு பஸ்கள் மேம் பாலம் வழியாக செல்லாமல் கிணத்துக்கடவு ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  சிவராமகிருஷ்ணன், கிணத்துக்கடவு.

தெருவிளக்குகள் ஒளிருமா?

  கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 44-வது வார்டு பகுதியில் தெருவிளக்குகள் ஒளிரவில்லை. இந்த விளக்கு கள் அனைத்தும் நன்றாக ஒளிர்ந்து கொண்டு இருந்தது. ஆனால் திடீரென்று ஊழியர்கள் வந்து இணைப்பை துண்டித்துவிட்டு சென்றனர். எனவே விளக்குகள் ஒளிராததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே தெருவிளக்குகள் ஒளிர வழிகவை செய்ய வேண்டும்.
  வேலன், கோவை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே குப்பைகள் மலைபோன்று குவித்து வைக்கப்பட்டு உள்ளது. குப்பைகள் அகற்றப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி மாணவிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
  மணிகண்டன், மேட்டுப்பாளையம்.

குண்டும் குழியுமான சாலை

  கோவை காந்தி பார்க்கில் இருந்து வேடப்பட்டி செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்ய வேண்டும்.
  பாரத், வேடப்பட்டி.

பழுதடைந்த படிக்கட்டுகள்

  குன்னூர் வண்ணாரபேட்டை ஐதர் கார்டன் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதை உள்ளது. இதில் உள்ள படிக்கட்டுகள் பழுதாகி உடைந்த நிலையில் இருக்கிறது. மேலும் இங்கு தெருவிளக்குகளும் ஒளிருவது இல்லை. எனவே உடைந்த படிக்கட்டுகளை சரிசெய்வதுடன், தெருவிளக்குகளையும் ஒளிர வைக்க வேண்டும்.
  யசோதா, வண்ணாரபேட்டை.

இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

  கோவை எருக்கம்பெனி பிரபு நகரில் இயங்கி வந்த மாட்டிறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டன. ஆனால் தற்போது அங்கு மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லவே முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே அங்கு கொட்டப்பட்டு வரும் கழிவுகளை அகற்ற வேண்டும்.
  கார்த்திக், பிரபுநகா்.

சாக்கடை கால்வாயில் அடைப்பு

  கோவை ரத்தினபுரி மருதகுட்டி வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் சுத்தம் செய்து பல நாட்கள் ஆவதால் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் கழிவுநீருடன் மழைநீர் அங்கு தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டும்.
  கணேசன், ரத்தினபுரி.
  


Next Story