பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி வேன் கிளீனர் பலி


பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி வேன் கிளீனர் பலி
x
தினத்தந்தி 11 Nov 2021 11:06 PM IST (Updated: 11 Nov 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி வேன் கிளீனர் பலி

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி வேன் கிளீனர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

வேன் கிளீனர் 

பொள்ளாச்சி அருகே உள்ள வாழைக்கொம்பு நாகூரை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 47). இவர் திவான்சாபுதூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் கிளீனராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அவர் பள்ளிக்கு அருகில் உள்ள தோட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தென்னை மட்டை விழுந்து மின் கம்பி அறுந்து கிடந்தது. அதை அவர் கவனிக்காமல் அந்த மின்கம்பி மீது மிதித்தாக தெரிகிறது. 

மின்சாரம் தாக்கி பலி 

இதனால் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து குழந்தைவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேட்டைக்காரன் புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story