கோதவாடிகுளத்துக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு
கோதவாடிகுளத்துக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு
கிணத்துக்கடவு
செட்டியக்காபாளையம் வாய்க்கால் மூலம் கோதவாடி குளத்துக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
கோதவாடி குளம்
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்துக்கு பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் மெட்டுவாவி பகுதியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இங்கிருந்து கோதவாடி குளத்திற்கு வரும் வழியில் 13-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன.
இந்த தடுப்பணைகள் நிரம்பிய பின்னர்தான் கோதவாடி குளத்திற்கு தண்ணீர் கிடைக்கும். தற்போது இந்த வழித்தடத்தில் உள்ள 7-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் கோதவாடி குளத்துக்கு செட்டியக்காபாளையம் கிளை வாய்க்கால் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இங்கிருந்து கோதவாடி குளத்துக்கு செல்லும் வழித்தடத்தில் விவசாய நிலம் இருப்பதால், அந்த வழியாக தண்ணீர் செல்ல விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து செட்டியக்காபாளையம் கிளை வாய்க்கால் மூலம் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் அதிகாரிகள் மற்றும் கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் அந்த வழியாக தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் சம்மதித்தனர்.
மீண்டும் தண்ணீர் திறப்பு
இதை தொடர்ந்து செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் இருந்து கோதவாடி குளத்துக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் பாய்ந்து கோதவாடி குளத்தை நோக்கி சென்றது.
தற்போது கோதவாடி குளத்துக்கு 2 இடங்களில் இருந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story