மதுரையில் விமான சேவை ரத்து
மதுரையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
மதுரை,
சென்னையில் தொடர் கனமழை காரணமாக நேற்று மோசமான வானிலை நிலவி வந்தது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் இருந்து சென்னை செல்லும் விமானங்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் நேற்று காலை 9.50 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை சென்ற விமானம் அங்கு மோசமான வானிலை காரணமாக பயணிகளுடன் பெங்களூரில் தரையிறங்கியது. மேலும் பகல் 11.55 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை செல்ல விமானம் 56 பயணிகளுடன் தயாராக இருந்தது. சென்னையில் மோசமான வானிலை நிலவுவதால் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கவில்லை. இதனால் அந்த சென்னை விமானம் ரத்து செய்யப்பட்டது. சுமார் 4 மணிநேரம் காத்திருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதேபோல மதுரையில் இருந்து மாலை 5.55 மணிக்கு சென்னை செல்ல இருந்த பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டது.
Related Tags :
Next Story