தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
சுகாதார வளாகம் தேவை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா கே.தொட்டியப்பட்டி கிராமத்தில் பெண்களுக்கான சுகாதார வளாக வசதி இல்லை. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இங்கு சுகாதார வளாகம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், ராஜபாளையம்.
சேறும், சகதியுமான சாலை
மதுரை கடச்சனேந்தல் பி.டி.ஆர். நகரில் சாலை வசதி இல்லை. வெறும் மண்சாலையாக உள்ளதால் மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதில் வாகனங்களும், பொதுமக்களும் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே, இப்பகுதியில் சாலை அமைக்க வேண்டும்.
-சுரேஷ்குமார், மதுரை.
பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை கீரைகணேசன் நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தற்போது பெய்த மழை காரணமாக சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-மாரிமுத்து, அருப்புக்கோட்ைட.
எரியாத தெருவிளக்கு
மதுரை விளாங்குடி கணபதி நகர் 2-வது தெருவில் உள்ள ெதருவிளக்கு எரியவில்லை. இதன் காரணமாக இரவு நேரத்தில் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. உடனடியாக எரியாத தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும்.
-நேரு, மதுரை.
தேங்கி நிற்கும் மழைநீர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீளக்குளம் கிராமத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக தண்ணீர் குளம் போல வீடுகளின் முன்பு ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதுபாலா, முதுகுளத்தூர்.
குண்டும், குழியுமான சாலை
மதுரை முனிச்சாலை நெல்பேட்டை சந்திப்பு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையானது குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
-பசீர், மதுரை.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் சாலையின் நடுவே படுத்து தூங்குவதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் அவைகள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
-கணேஷ், காரைக்குடி.
Related Tags :
Next Story






