ஆசிரியர் பணியிடை நீக்கம்


ஆசிரியர்  பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 12 Nov 2021 3:03 AM IST (Updated: 12 Nov 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.

செக்கானூரணி, 
மதுரை மாவட்டம் செக்கானூரணியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் வீட்டு பாடம் எழுதாமல் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியையை கேலி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வரலாறு பாட ஆசிரியர் திரிலோக சுந்தரம் அந்த மாணவனை தாக்கும் வீடியோவை சக மாணவர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலை தளங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவியதன் காரணமாக வரலாறு ஆசிரியர் திரிலோக சுந்தரத்தை உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் ராகவன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story