அந்தியூர் அருகே டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை
அந்தியூர் அருகே டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கால்நடை டாக்டர்
அந்தியூர் அருகே உள்ள அத்தாணி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி கால்நடை ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மணிமேகலை. நேற்று முன்தினம் சதீஷ்குமார் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார். பின்னர் நேற்று மாலை வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
திருட்டு
உடனே அவர் பதற்றத்துடன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணி மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்ததை கண்டார். உடனே அவர் பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 1 பவுன் எடையிலான 4 ேஜாடி கம்மல் மற்றும் ரூ.5 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story