சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம்
x
தினத்தந்தி 11 Nov 2021 9:59 PM GMT (Updated: 11 Nov 2021 9:59 PM GMT)

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம் போனது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம் போல் பூக்கள் ஏலம் நடந்தது.
இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,575-க்கும், முல்லை ரூ.660-க்கும், காக்கடா ரூ.825-க்கும், செண்டுமல்லி ரூ.60-க்கும், பட்டுப்பூ ரூ.73-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.465-க்கும், சம்பங்கி ரூ.15-க்கும், அரளி ரூ.280-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது. 

Next Story