காஞ்சீபுரம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு
x
தினத்தந்தி 12 Nov 2021 3:07 PM IST (Updated: 12 Nov 2021 3:07 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அவசர தேவை மற்றும் புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண்களை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.

பாதுகாப்பான இடத்தில்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைபெய்து வருகிறது. பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பை கருதி, மேல் தளத்திற்கு சென்று பாதுகாப்பான இடத்தில் இருக்கலாம். அல்லது அருகில் இருக்கும் அரசு நிவாரண முகாம்களில் தங்கி கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தால் கேட்டு கொள்ளப்படுகிறது.

வரதராஜபுரம் மற்றும் மாங்காடு பேரூராட்சிகளை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பை கருதி, மேல் தளத்திற்கு சென்று பாதுகாத்து கொள்ளுமாறும் அல்லது அருகில் இருக்கும் அரசு நிவாரண முகாம்களில் தங்கி கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தால் கேட்டு கொள்ளப்படுகிறது.

புகார்களை தெரிவிக்க

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அடையாள அட்டை, கல்விச்சான்று, நிலப்பட்டா பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை நெகிழி பைகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து பொதுமக்கள் அனைவரும் தங்கள் உடைமைகளையும், தங்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் தங்களின் அவசர தேவை மற்றும் புகார்களை தெரிவிக்க, மாவட்ட கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். மேலும், மாவட்ட கலெக்டர் எண். 94441 34000, மாவட்ட வருவாய் அலுவலர் எண். 94450 00903, மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்- 044 27237 107, 044 27237 207, கைபேசி மற்றும் வாட்சப் எண். 93454 40662 மற்றும் இலவச அழைப்பு எண். 1077 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story