தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு புதிய விதிமுறைகள்


தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு புதிய விதிமுறைகள்
x
தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு புதிய விதிமுறைகள்
தினத்தந்தி 12 Nov 2021 9:29 PM IST (Updated: 12 Nov 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு புதிய விதிமுறைகள்

பொள்ளாச்சி

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதையொட்டி தென்னை நார் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகிறது. தென்னை நாரில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்கள் உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் தென்னை நார் தொழிற்சாலைகளில் பரவும் தூசி மற்றும் மட்டையை தண்ணீரில் நனைக்கும் போது வெளியாகும் நீரின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் நீர்நிலைகள் மாசுபடுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சில புதிய விதிமுறைகளை வகுத்து உள்ளது. இந்த நிலையில் தென்னை நார் தொழிற்சாலைகளில் பின்பற்ற வேண்டியது என்ன என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சில புதிய விதிமுறைகளை தென்னை நார் தொழிற்சாலைகள் மற்றம் நார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வகுத்து உள்ளது. சிகப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை என நான்கு வகைகளில் தென்னை நார் தொழிற்சாலைகள் ஆரஞ்சு என்ற நிலையில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

 மேலும் நீர்நிலைகள் மாசுபடாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தேங்காய் மட்டையை முழுவதுமாக மூடப்பட்ட ஒரு ஷெட்டில் தனியாக மேடை அமைத்து வைக்க வேண்டும். இதன் மூலம் மழைநீரானது அதன் மீது படுவது தடுக்கப்படும்.

தேங்காய் மட்டை மற்றும் பித்தை ஊற வைக்கும் போது மழைநீர் புகாத வகையில் தனியாக மேடை அமைத்து வைக்க வேண்டும். மட்டை மற்றும் பித்தை ஊற வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை மட்டும் உபயோகப்படுத்த வேண்டும். இதன் மூலம் அதிக அளவிலான கழிவுநீர் உற்பத்தியாவதை தவிர்க்க வேண்டும். 

மட்டை மற்றும் பித்தை ஊற வைக்கும் போது வெளியாகும் கழிவுநீரை முழுவதுமாக மாற்றி சுத்திகரித்து மீண்டும் உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும். அவ்வாறு சுத்திகரிக்கும் போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிகளின்படி முழுவதுமாக சுத்திகரிக்கப்பட வேண்டும். நார், பித்தை உலர வைக்க கான்கீரிட் மேடை அமைக்க வேண்டும்.

மழைக்காலங்களில் நார் மற்றும் பித்தை முழுவதுமாக தார்ப்பாய் கொண்டு மூடி வைக்க வேண்டும். மேலும் மழைநீரை சேமித்து அதை நிறுவனங்களுக்கு உபயோகப்படுத்தி கொள்ளலாம். நிறுவனங்கள் தங்களது கழிவுநீரை எந்த காரணம் கொண்டும் அருகில் உள்ள நீர்நிலைகள் மற்றும் இதர நிலங்களில் விட கூடாது. இந்த தண்ணீரை முழுமையாக சுத்திகரித்து மீண்டும் உபயோகப்படுத்த வேண்டும். 

காசு மாசுவடுதை தவிர்க்க எந்ததவொரு சூழ்நிலையிலும் தென்னை நார், பித்களை திறந்த தரிசு நிலங்களில் மற்றும் நீர்நிலைகளை ஓட்டி உள்ள விவசாய நிலங்களில் உலர்த்த கூடாது. மேற்கண்ட விதிகளை தென்னை நார் தொழிற்சாலைகள் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story