கோதவாடி குளத்துக்கு வந்த பி.ஏ.பி தண்ணீர்
கோதவாடி குளத்துக்கு வந்த பி.ஏ.பி தண்ணீர்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் சிறிதளவுகூட தண்ணீர் வரவில்லை. ஆனால் இந்தகுளத்தில் தண்ணீர்தேக்கினால் குளத்தின் அருகில் விவசாயபணிகளும், குளத்தைசுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர்பிரச்சினையும் தீரும். புதர்மண்டிகிடந்த இந்த குளத்தை சீரமைக்க கோதவாடிகுளம்பாதுகாப்பு அமைப்பு மற்றும் தனியார் நிறுவனங்கள், குளம் அருகில் இருக்கும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். குளத்துக்கு பி.ஏ.பி.தண்ணீர்கிடைக்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்கட்டமாக மெட்டுவாவி வழியாகவும், 2-ம்கட்டமாக செட்டியக்காபாளையம் கிளை வாய்க்கால் வழியாகவும், பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீர் குளத்துக்கு திறந்து விடப்பட்டது. மெட்டுவாவி வழியாக வரும் பி.ஏ.பி. தண்ணீர் அந்த பகுதியில் உள்ள குட்டைகள் நிரம்பிய பிறகு, கோதவாடிகுளத்திற்கு வந்து சேரும். செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் திறக்கப்பட்ட பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீர் நேற்று கோதவாடி குளத்தை அடைந்தது.
கோதவாடி குளத்திற்கு வந்த பி.ஏ.பி தண்ணீரை கோதவாடி பகுதி விவசாயிகள் மலர்தூவி வரவேற்று வணங்கி மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் குளத்துக்கு தண்ணீர் வந்த தகவலை அறிந்ததும் கோதவாடி குளத்தை சுற்றி உள்ள கிராம மக்கள் குளத்திற்கு வந்து பார்த்து உற்சாகம் அடைந்தனர்.
Related Tags :
Next Story