பா.ம.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி அம்மாபேட்டை அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தில் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் அபிமன்னன் தலைமை தாங்கினார். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்க மாநில அமைப்பு துணைத்தலைவர் எ.ஜெகதீஷ், ஒலகடம் சேகர், டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட துணைச்செயலாளர் கே.எம்.சரவணன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் சர்வேயர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்சியின் மாநில முன்னாள் துணை பொதுச்செயலாளர் எஸ்.சி.ஆர்.கோபால், வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சரவணன் உள்பட கட்சி நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் வன்னிய சமுதாய மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story