பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பர்கூர் மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பர்கூர் மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக மாலை நேரங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழை நீரானது பெருக்கெடுத்து ஓடுவதால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியுள்ளது. அதன் உபரி நீர் வெளியேறி அந்தியூர் பகுதியில் உள்ள கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி ஆகிய ஏரிகளுக்கு செல்கிறது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகின்றன.
அந்தியூர் ஏரியின் நீர்மட்டம் 17.50 அடி ஆகும். தற்போது ஏரியில் 14.25 அடி தண்ணீர் வந்து உள்ளது. அந்தியூர் பெரிய ஏரியின் நீர்மட்டம் 16 அடி. இதில் தற்போது 8 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. எண்ணமங்கலம் ஏரியின் உயரம் 11.25 அடியாகும். இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் அதன் உபரிநீர் கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி ஆகிய ஏரிகளுக்கு செல்கிறது.
விவசாய பணி
மேலும் 16.5 அடி உயரமுடைய அத்தாணி அருகே உள்ள தண்ணீர்பள்ளம் ஏரியில் 12.75 அடிக்கும், 15.50 அடி உயரமுடைய கரும்பாறை பள்ளம் ஏரியில் 12 அடி உயரத்துக்கும், 12 அடி உயரமுடைய சந்தியபாளையம் ஏரியில் 4.5 அடி உயரத்துக்கும் தண்ணீர் உள்ளது.
வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அந்தியூர் பெரிய ஏரி, கெட்டி சமுத்திரம் ஏரி விரைவில் நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். தொடர்ந்து அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story