இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளிக்கூடம் எதிரே உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்தில் இருந்து கட்சியினர் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் ஊர்வலமாக சத்தியமங்கலம் பஸ் நிலையத்துக்கு நேற்று மாலை 4.30 மணி அளவில் வந்தனர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வனை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் போன்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ஸ்டாலின் சிவகுமார், சத்தி ஒன்றிய செயலாளர்கள் சுடர் நடராஜ், சுரேந்திரன், விவசாய தொழிற்சங்க மாவட்ட தலைவர் சி.கே.முருகன், கடம்பூர் ஒன்றியச் செயலாளர் ராமசாமி, பவானிசாகர் ஒன்றிய செயலாளர் வேலுமணி, 50 பெண்கள் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story