கோவை கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் வந்த பெண் தீக்குளிக்க முயற்சி


கோவை கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் வந்த பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 12 Nov 2021 10:50 PM IST (Updated: 12 Nov 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

கோவை கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் வந்த பெண் தீக்குளிக்க முயற்சி

கோவை

கோவை கலெக்டர்அலுவலகத்துக்கு 2 குழந்தைகளுடன் வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்து வேறுபாடு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவருடைய மனைவி ஜெயபாரதி (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
 
இதனால் ஜெயபாரதி கோபித்துக் கொண்டு தனது குழந்தை களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை உக்கடத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் சரவணனுக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. 

தீக்குளிக்க முயற்சி

இது குறித்து தனது கணவரிடம் ஜெயபாரதி கேட்டதுடன், நாம் சேர்ந்து வாழலாம் என்று அறிவுரை கூறியுள்ளார். அதற்கு சரவணன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை ஜெயபாரதி தனது கணவரிடம் பேசியும் அவர் ஏற்க வில்லை என்று தெரிகிறது. 

இந்த நிலையில் ஜெயபாரதி  தனது2 குழந்தைகளுடன் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து வந்து அவர் கையில் இருந்த மண்ணெணையை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

 அத்துடன் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுரை கூறி அனுப்பினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story