ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக கூறி கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ 10 லட்சம் பறிப்பு
ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக கூறி கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ 10 லட்சம் பறிப்பு
கோவை
கோவையில் ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதாக கூறி கட்டிட ஒப்பந்ததாரரை காரில் கடத்தி ரூ.10 லட்சத்தை பறித்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கட்டிட ஒப்பந்ததாரர்
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் ராஜா (வயது 29). கட்டிட ஒப்பந்ததாரர். இவர் கோவையில் உள்ள கட்டுமான நிறுவ னத்தில் பணிகளை எடுத்து தொழில் செய்து வந்தார். அந்த பணியை செய்து முடித்த நிலையில் அவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர், தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடிவு செய்தார். இதற்காக அவர் தன்னிடம் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகளை மாற்ற வேண்டும் என்று தனது நண்பர் மனோகரனிடம் கூறியுள்ளார்.
ரூ.10 லட்சம் பறிப்பு
அதற்கு அவர் ரூ.10 ஆயிரம் கமிஷன் கொடுத்தால் ரூபாய் நோட்டு களை மாற்றி கொடுக்க ஆட்கள் உள்ளனர் என்று கூறியதாக தெரிகி றது. ராஜா கமிஷன் கொடுக்க சம்மதம் தெரிவித்ததால் கோவையை சேர்ந்த ராகுல் என்பவரின் செல்போன் எண்ணை மனோகரன் கொடுத்து உள்ளார்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் பேசியபடி கோவை - திருச்சி ரோடு சிங்காநல்லூர் அருகே சந்தித்தனர். அப்போது ராகுல் உள்பட 5 பேர் சேர்ந்து திடீரென்று ராஜாவை காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட முயன் றார். ஆனால் அவர்கள், அவரை மிரட்டி அமைதியாக இருக்க வைத்தனர். பின்னர் அவர்கள், ராஜாவிடம் இருந்த ரூ.10 லட்சத்தை பறித்தனர்.
5 பேருக்கு வலைவீச்சு
இதையடுத்து அவரை விட்டு காரில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவிடம் பணத்தை பறித்து சென்ற ராகுல் உள்பட 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கட்டிட ஒப்பந்ததாரரை காரில் கடத்தி ரூ.10 லட்சத்தை 5 பேர் கும்பல் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story