தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 Nov 2021 10:58 PM IST (Updated: 12 Nov 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

குண்டும் குழியுமான சாலை 


  கோத்தகிரி கிளை நூலகத்தில் இருந்து ராம்சந்த் சதுக்கம் செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதில் மழைநீர் தேங்கி நிற்பதால் குழிகள் இருப்பது தெரியவில்லை. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.

ரஞ்சித், கோத்தகிரி.


வழிந்தோடும் கழிவுநீர்


  கோவை குறிச்சி மாரியம்மன் கோவில் அருகே சாக்கடை கால் வாய் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இதனால் சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு மிகக்கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே அங்கு தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளதால், உடனடியாக அதிகாரிகள் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.

  முருகன், குறிச்சி.


பல்லாங்குழியாக மாறிய சாலை


  கூடலூரில் இருந்து தோட்டமூலா செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் பல்லாங்குழியாக மாறிவிட்டது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக அவசர காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகளை விரைவாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. எனவே சாலையை சீரமைத்து தர வேண்டும்.

  ஜோசப், கூடலூர்.


ஒளிராத தெருவிளக்கு


  நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி நாடுகாணி பகுதியில் கடந்த 3 மாதமாக தெருவிளக்கு ஒளிரவில்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் சரிசெய்யவில்லை. எனவே இந்த தெருவிளக்கை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும்.

  சுந்தரலிங்கம், நாடுகாணி.


போக்குவரத்து நெரிசல்


  கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் உள்ள கடைகளுக்கு முன்பு ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. எந்த அனுமதியும் இ்ல்லாமல், அங்கு ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், கடைகளில் விற்பனையும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே கடைகள் முன்பு ஆட்டோக்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.

  சையது இப்ராகிம், கோத்தகிரி. 


குவிந்து கிடக்கும் குப்பைகள்


  கோவை பீளமேடு பி.ஆர்.பி. கார்டன் பகுதியில் குப்பைகளை சரிவர சுத்தம் செய்வது இல்லை. இதனால் அங்கு குப்பைகள் மலைபோன்று குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை சுத்தம் செய்ய வேண்டும்.

  சித்தார்த், பீளமேடு.


பஸ் இயக்கப்படுமா?


  கோவை மாவட்டம் காடம்பட்டி ஊராட்சி குமாரபாளையம் கிராமத்துக்கு கருமத்தம்பட்டியில் இருந்து தினமும் 4 முறை 30 எம் என்ற அரசு பஸ் இயக்கப்பட்டது. தற்போது அந்த பஸ் ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே முன்பு இருந்ததுபோன்று இந்த பஸ்சை 4 முறை இயக்க வேண்டும்.

  லிங்கத்தாய், காடம்பட்டி.


வீணாகும் குடிநீர்


  கோவை மாநகராட்சி 94-வது வார்டு குறிச்சியில் உள்ள ஆட்டோ நிறுத்தம் அருகே குடிநீர் குழாய் உடைந்து கடந்த 2 நாட்களாக தண்ணீர் வீணாக சென்று வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சரிசெய்ய வேண்டும்.

  இப்ராகீம், குறிச்சி.


சுகாதார சீர்கேடு


  காரமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால், குப்பைகளுடன் மழைநீரும் தேங்குவதால் அருகில் செல்ல முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளி அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

  மாதேஸ்வரன், காரமடை.


சீராக ஒளிராத மின்விளக்குகள்


  கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டின் மத்தியில் மின்விளக்குகள் போடப்பட்டு உள்ளது. இந்த விளக்குகள் இரவு 7 மணிக்குதான் ஒளிருகிறது. தற்போது 6 மணிக்கு இருள் சூழ்ந்து விடுவதால், ஒரு மணி நேரம் அங்கு இருளாக இருக்கிறது. இதை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இங்குள்ள விளக்குகள் 6 மணிக்கே சீராக ஒளிர வழிவகை செய்ய வேண்டும்.

  பழனிசாமி, கோவை.


காய்கறி கழிவுகளால் பாதிப்பு


  கோவை அருகே உள்ள குருடம்பாளையம் ஊராட்சி மாருதி நகரில் காய்கறி கழிவுகள் மற்றும் குப்பைகள் குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் வீடுகளில் இருக்க முடியவில்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

  செல்வின், மாருதிநகர்.


விபத்தை ஏற்படுத்தும் சாலை


  கோவை ரத்தினபுரியில் உள்ள அருள்நகர் கார்டன் பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக செல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்தை ஏற்படுத்தும் இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.

  கோபால், ரத்தினபுரி.

  



Next Story