வேலூர் சத்துவாச்சாரி மலையில் திடீர் நீர்வழ்ச்சி


வேலூர் சத்துவாச்சாரி மலையில் திடீர் நீர்வழ்ச்சி
x
தினத்தந்தி 12 Nov 2021 11:50 PM IST (Updated: 12 Nov 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் சத்துவாச்சாரி மலையில் திடீர் நீர்வழ்ச்சி

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி மலையில் மழைக்காலங்களில் நீர்வீழ்ச்சி உருவாகும். அதை ‘கப் அண்டு சாசர்’ நீர்வீழ்ச்சி என அப்பகுதியை சேர்ந்தவர்கள் அழைப்பார்கள். தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக திடீரென நீர்வீழ்ச்சி உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு தொட்டி போல் கட்டப்பட்டுள்ள பகுதியில் மழைநீர் தேங்கி பின்னர் உபரிநீர் வெளியேறுகிறது.

தொட்டியில் தேங்கியுள்ள மழைநீரில் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த ஏராளமான வாலிபர்கள், சிறுவர்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மழை காலம் முழுவதும் நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர் அங்குள்ள கால்வாயில் சென்றடைகிறது. கால்வாயில் செல்லும் தண்ணீர் கழிவு நீருடன் கலந்து பின்னர் பாலாற்றில் கலக்கிறது. 

நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீரை சிறிய தடுப்பணை கட்டி தேக்கி வைத்தால் கோடைகாலங்களில் வேலூரில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உதவும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story