வைகை ஆற்றில் இறங்கிய தொழிலாளி பிணமாக மீட்பு


வைகை ஆற்றில் இறங்கிய தொழிலாளி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 13 Nov 2021 1:07 AM IST (Updated: 13 Nov 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளத்தில் சிக்கிய மாடுகளை காப்பாற்றுவதற்காக வைகை ஆற்றில் இறங்கிய தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.

மதுரை, நவ.
வெள்ளத்தில் சிக்கிய மாடுகளை காப்பாற்றுவதற்காக வைகை ஆற்றில் இறங்கிய தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
தொழிலாளி
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோட்டை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 49), சலவை தொழிலாளி. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த ஆற்று வெள்ளத்தில் நேற்று முன்தினம் மாடுகள் சிக்கிக் கொண்டன. அப்போது அந்த வழியாக சென்ற மீனாட்சி சுந்தரம் அதனை கண்டார். உடனே மாடுகளை காப்பாற்றுவதற்காக அவர் ஆற்றில் இறங்கி மாடுகளை ஆற்றங்கரைக்கு விரட்டினார்.
அப்போது எதிர்பாராத விதமாக வைகை ஆற்றின் வெள்ளம் அவரை இழுத்து சென்றது. அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தல்லாகுளம் தீயணைப்புத்தறை அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் வைகை ஆற்றுக்குள் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் ஆற்றில் சிக்கிய சலவை தொழிலாளியை மீட்க முடியவில்லை. அதை தொடர்ந்து நேற்று காலை முதல் தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
விசாரணை
இந்த நிலையில் நேற்று மாலை திருமலைராயர் படித்துறை பாலம் அருகே வைகை ஆற்றின் நடுவே  மீனாட்சி சுந்தரத்தின் உடலை பிணமாக தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வைகை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் யாரும் உள்ளே இறங்க வேண்டாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Next Story