உத்திரமேரூர் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
உத்திரமேரூர் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
உத்திரமேரூர்,
உத்திரமேரூர் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
காஞ்சீபுரத்தை அடுத்த தேனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 65). இவரது மனைவி பச்சையம்மாள் (60). இவர்கள் இருவரும் உத்திரமேரூர் ஒன்றியம் சிருபினாயூர் கிராமத்தில் உள்ள முருகன் என்பவரது வீட்டில் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர்.
முருகனின் வீட்டு அருகிலேயே இவர்கள் குடிசை அமைத்து தங்கி இருந்தனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் குடிசைக்கு அருகாமையில் உள்ள வீரராகவன் என்பவரது பழுதடைந்த வீட்டின் சுவர் நாகப்பன் படுத்திருந்த குடிசையின் மீது இடிந்து விழுந்தது.
இதில் காயம் அடைந்த நாகப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதிர்ஷ்டவசமாக அவரது மனைவி பச்சையம்மாள் உயிர்தப்பினார். இதுகுறித்து பச்சையம்மாள் சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story