விதைகளை சேதப்படுத்தும் மயில்கள்


விதைகளை சேதப்படுத்தும் மயில்கள்
x
விதைகளை சேதப்படுத்தும் மயில்கள்
தினத்தந்தி 13 Nov 2021 4:51 PM IST (Updated: 13 Nov 2021 4:51 PM IST)
t-max-icont-min-icon

விதைகளை சேதப்படுத்தும் மயில்கள்

நெகமம்

நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மயில்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.  உணவு தேடி சுற்றும் இந்த மயில்கள், அந்த பகுதிகளில் விளை நிலங்களில் விதைக்கப்பட்டுள்ள விதைகளை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பொதுவாக பூச்சி, புழு உள்ளிட்ட சிற்றுயிர்கள் முதல் நரி, கீரி உள்ளிட்ட உயிர்கள் வரை ஒரு வாழ்க்கை சங்கிலி தொடர் உண்டு. அதாவது விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் புழு, பூச்சிகளை ஓணான், தவளை உள்ளிட்ட உயிரினங்கள் உணவாக்கிக் கொள்ளும்.
 பின்னர் இந்த தவளை உள்ளிட்ட உயிரனங்களை பாம்பு போன்ற உயிரனங்கள் உணவாக்கும். அவற்றை மயில் போன்ற பறவைகள் உணவாக்கிக் கொள்ளும். இதே போல பூச்சி, புழுக்களை உணவாக்கும் மயில் உள்ளிட்ட பறவைகளை நரி போன்ற உயிரனங்கள் உணவாக்கும்.

இத்தகைய வாழ்க்கை சங்கிலி எங்கோ ஒரு இடத்தில் அறுந்து போகும் போது பல பிரச்சினைகள் உருவாகிறது. அந்த வகையில் பயிர்களில் உருவாகும் பூச்சி, புழுக்களை ரசாயன முறையில் அழிக்கும் போது பறவைகளுக்கு உணவு கிடைக்காமல் தானியங்களை அழிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. மேலும் இந்த வாழ்க்கை சங்கிலி பாதிப்படையும் போது உயிரனங்கள் அழிவுக்கு தள்ளப்படுவதோ அல்லது அதிக அளவில் பெருகுவதோ நடக்கக்கூடும்.
அந்த வகையில் தற்போது நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மயில்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.மேலும் இந்த பகுதிகளில் தக்காளி, கம்பு, நிலக்கடலை, மக்காச்சோளம், தட்டைப்பயிர் போன்ற பல பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது விதைக்கப்பட்டுள்ள விதைகள் முளைப்பதற்கு முன்பாகவே மயில்கள் மற்றும் காகம் போன்றவை உணவாக்கிக் கொள்கிறது.மேலும் பயிர்கள் முளைக்காமல் வீணாகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

சில நேரங்களில் முளைத்த பயிர்களையும் மயில்கள் சேதப்படுத்தி விடுகிறது. ஆனால் மற்ற பறவைகளைப் போல மயில்களை கற்களை கொண்டு வீசி விரட்ட முடியாத நிலை உள்ளது. ஏனென்றால் எதிர்பாராமல் மயில்கள் மீது கற்கள் பட்டு அவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டால் அது குற்றமாகிவிடும். எனவே மயில்களிடமிருந்து பயிர்களை பாதுகாப்பது சிரமமாக உள்ளது. ஆகவே இதற்கு வேளாண்துறை அதிகாரிகள் ஏதாவது தீர்வு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
-------


Next Story