போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 13 Nov 2021 7:14 PM IST (Updated: 13 Nov 2021 7:14 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

கோவை


பொது இடத்தில் இளம்பெண் முத்தம் கொடுத்த வீடியோ வைரலானதால் போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இளம்பெண்ணுடன் போலீஸ்காரர்

கோவை உக்கடம் வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டு உள்ளது. 

இங்கு பொழுதுபோக்கு பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர்.
அங்கு நேற்று முன்தினம் மாலை சீருடை அணிந்த போலீஸ்காரர் ஒருவர், இளம்பெண் ஒருவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். 

அப்போது இளம்பெண் போலீஸ்காரருடன் நெருக்கமாக பேசிக் கொண்டு இருந்தார். 

முத்தம் கொடுத்தார்

இதற்கிடையே அந்த பெண், போலீஸ்காரருக்கு முத்தம் கொடுத்தார். இதை அங்கிருந்த சிலர், செல்போனில் வீடியோ எடுத்தனர். 

பின்னர் அவர்கள், அந்த போலீஸ்காரரிடம் சென்று நீங்கள் எந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றுகிறார்கள்.

இந்த பெண் யார்? என்று கேட்டனர். அதற்கு அந்த போலீஸ்காரர் சரியாக பதில் அளிக்காமல் இளம் பெண்ணை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார்.

விசாரணை

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அந்த வீடியோ சமூக வலைத் தளத்தில் வைரலானது. 

இது மாநகர போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அந்த வீடியோ வின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில், அவர், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி (வயது 32) என்பதும், கோவை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. 

மேலும் திருமணமான இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

பணியிடை நீக்கம்

சில நாட்களுக்கு முன்பு பாலாஜியின் வீட்டிற்கு உறவுக்கார பெண் ஒருவர் வந்துள்ளார். அந்த பெண்ணை, பாலாஜி உக்கடம் வாலாங்கு ளத்திற்கு அழைத்து சென்றுள்ளார். 

அங்கு பொது இடத்தில் அந்த பெண்ணுடன், போலீஸ் உடையில் இருந்த பாலாஜி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. 

 இதையடுத்து போலீஸ்காரர் பாலாஜியை, பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து ஆயுதப்படை துணை கமிஷனர் முரளிதரன் உத்தரவிட்டார்.


Next Story