வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
கோவை
10 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்நேற்று நடைபெற்றது. இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முகாம் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியல்
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
ஆனால் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் குறைந்த அளவிலேயே வந்து தங்களின் பெயர் உள்ளதா என்று சரி பார்த்தனர். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், தங்களின் பெயர் சேர்க்க கோரி விண்ணப்பம் கொடுத்தனர்.
பெயர் நீக்கம், திருத்தம் கோரியும் சிலர் விண்ணப்பம் கொடுத்தனர். வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் இன்றும் (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது
18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளலாம். பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், திருத்தம் செய்ய விரும்புவோர்,
பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் மற்றும் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக படிவங்களில் உரிய ஆவணங்க ளை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம்
பொதுமக்கள் WWW.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறு கிறது.
முகாம் நாட்களில் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதில் பெயர் உள்ளதா? என்பதை வாக்காளர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story