தொழில் அதிபருக்கு கத்திக்குத்து


தொழில் அதிபருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 13 Nov 2021 7:26 PM IST (Updated: 13 Nov 2021 7:26 PM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபருக்கு கத்திக்குத்து


துடியலூர்

கோவையை அடுத்த சின்னதடாகத்தை சேர்ந்தவர் மாணிக்கவடிவேல் (வயது42). தகரசீட் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர். 

இவர் நேற்று கண்ணப்ப நகர் புதுத்தோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டில் இருந்து வீசப்பட்ட மரக்கட்டை மாணிக்கவடிவேல் மீது விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டுள்ளார். 

உடனே அங்குள்ள வீட்டில் இருந்து அஜய் பெலிக்ஸ் (21) என்பவர் வந்து மாணிக்கவடிவேலிடம் வாக்குவாதம் செய்தார்.

இதில்ஆத்திரம் அடைந்த அஜய் பெலிக்ஸ், மாணிக்கவடிவேலை கத்தியால் குத்தினார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து அஜய் பெலிக் சை கைது செய்தனர்.


Next Story