கத்தரிக்காய், வெண்டைக்காய் கிலோ 100 க்கு விற்பனை


கத்தரிக்காய், வெண்டைக்காய் கிலோ 100 க்கு விற்பனை
x
தினத்தந்தி 13 Nov 2021 7:38 PM IST (Updated: 13 Nov 2021 7:38 PM IST)
t-max-icont-min-icon

கத்தரிக்காய், வெண்டைக்காய் கிலோ 100 க்கு விற்பனை

கோவை

தமிழகத்தில் கோவை உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி தோட்டங்களில் தண்ணீர் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. 

இதனால் வரத்து குறைந்து காய்கறி விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலை கிலோ ரூ.80 வரை விலை உயர்ந்து

 காணப்பட்டது. தற்போது விலை சற்று குறைந்து ரூ.60-க்கு விற்பனையானது.

இதில், கத்தரிக்காய், வெண்டைக்காய் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கேரட் கிலோ ரூ.80, பீன்ஸ் ரூ.80, சின்னவெங்காயம் ரூ.50, பெரியவெங்காயம் ரூ.40, மிளகாய் ரூ.40-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

கோவை மார்க்கெட்டுகளுக்கு மராட்டியம், கர்நாடகா மாநிலங்களில் இருந்து பெரியவெங்காயம், உருளைக்கிழங்கு, ஆப்பிள் தக்காளி உள் ளிட்ட காய்கறிகள் வருகிறது. 

வெளிமாவட்டங்களில் இருந்து கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் வருகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, 

மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது. வரும் நாட்களில் காய்கறி விலை குறையும் என்றனர்.

Next Story