புகார் பெட்டி
புகார் பெட்டி
தெருவிளக்குகள் வேண்டும்
கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில் ஏராளமான குடியிருப்புக்கள் உள்ளன. இங்கு கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்டவன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே இப்பகுதியில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்கவும், சாலையோரங்களில் வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்றவும் பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாபுபாய், கோத்தகிரி.
கட்டிட இடிபாடுகள்
ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தடுப்புச்சுவர் தொடர் மழை காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு இடிந்து. இதுவரை இடிபாடுகள் அகற்றப்படாமல் சாலையோரத்தில் அப்படியே கிடக்கிறது. மேலும் தடுப்புக்சுவர் கட்டப்படாததால் நோயாளிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் அருகே தடுப்புச்சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்.
பிரபாகரன், ஊட்டி.
குதிரைகளால் விபத்து
ஊட்டி ஸ்டேட் வங்கி முன்பு குதிரைகள் நடமாட்டம் உள்ளது. குதிரைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்ட படி சாலையில் அங்கும், இங்கும் ஓடியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி கீழே விழுந்து காயம் அடைந்தனர். குதிரைகளால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே, போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளை பிடிக்க வேண்டும்.
புஷ்பா, ஊட்டி.
சேதமடைந்த சாலை
கிணத்துக்கடவு அருகே உள்ள மேட்டுப்பாளையத்துக்கு செல்லும் வழியில் உள்ள ரெயில்வே கேட் அருகில் சாலை சேதம் அடைந்து குழி ஏற்பட்டுள்ளது. மழை நேரங்களில் இந்த குழியில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்லும் போது தடுமாறி கீழே விழுந்துவிடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
சிவகுமார், சூலக்கல்.
அலுவலம் திறக்கப்படுமா?
கிணத்துக்கடவில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு இதுநாள் வரை திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் உரிய ஆவணங்கள் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது அந்த அலுவலக கட்டிடம் புதர்மண்டி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதர்களை அகற்றுவதோடு, உடனடியாக தாலுகா அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ்ராஜன், கிணத்துக்கடவு.
வாகன ஓட்டிகள் அவதி
பொள்ளாச்சி அருகே உடுமலை ரோட்டில் இருந்து மாக்கினாம்பட்டி செல்லும் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சாலை படுமோசமாக குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகின்றன. எனவே சாலையை சீரமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரதீஷ், மாக்கினாம்பட்டி.
நாய் தொல்லை
பொள்ளாச்சி வெங்கடேசா காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சில நேரங்களில் நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்படுகின்றனர். எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஞ்சித், வெங்கடேசா காலனி.
விபத்துகள் தடுக்கப்படுமா?
கோவை கணபதி எப்.சி.ஐ. சாலை, குண்டும் குழியுமாக மாறி பல்லாங்குழி சாலையாகிவிட்டது. கியாஸ் லாரிகளும் இந்த சாலை வழியாக செல்கின்றன. மேலும் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே பழுதான சாலையை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
குப்புசாமி, கணபதி.
சுகாதார சீர்கேடு
கோவை அருகே உள்ள சரவணம்பட்டி 30-வது வார்டு பகுதியில் உள்ள விநாயகபுரம் ரோடு பழுதடைந்ததோடு, குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. மேலும், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், சரவணம்பட்டி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
கோவை காந்திபுரம் அருகே ரத்தினபுரி மருதகுட்டி வீதியல் சாக்கடை கால்வாய்கள் மறுசீரமைப்பு பணிகள் நடக்கவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுப்பதோடு, சாக்கடை கால்வாயை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திரன், காந்திபுரம்.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
குடிநீர் சீராக வினியோகம்
கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் பழுதடைந்த நிலையில் குடிநீர் தொட்டி இருந்தது. இதனால் அந்தப்பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன்காரணமாக அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதனால் சீராக குடிநீர் வேண்டும் என்று கோரிடிக்கை விடுத்தனர். மேலும் இதுபற்றிய செய்தி தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆர்.எம்.மூர்த்தி, கோவை.
Related Tags :
Next Story