சரக்கு வேனில் 1½ டன் ரேஷன் அரிசியை கடத்த முயற்சி


சரக்கு வேனில்  1½ டன் ரேஷன் அரிசியை கடத்த முயற்சி
x
தினத்தந்தி 13 Nov 2021 9:25 PM IST (Updated: 13 Nov 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே சரக்கு வேனில் 1½ டன் ரேஷன் அரிசியை கடத்த முயற்சி நடந்தது.

நம்பியூர் அருகே உள்ள ராமநாதபுரத்தில் நம்பியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார்  ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு சரக்கு வேனில் சிலர் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர் உடனே போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எனவே மர்ம நபர்கள் சிலர் சரக்கு வேனில் ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும், போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சரக்கு வேன், அதில் இருந்த 1½ டன் ரேஷன் அரிசி மற்றும் தப்பி ஓடியவர்கள் விட்டுச்சென்ற செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து நம்பியூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story