தூய்மை பணி மேற்கொள்ள கோபி நகராட்சி பணியாளர்கள் சென்னைக்கு பயணம்


தூய்மை பணி மேற்கொள்ள  கோபி நகராட்சி பணியாளர்கள் சென்னைக்கு பயணம்
x
தினத்தந்தி 13 Nov 2021 9:35 PM IST (Updated: 13 Nov 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணி மேற்கொள்ள கோபி நகராட்சி பணியாளர்கள் சென்னைக்கு சென்றார்கள்.

சென்னையில் கனமழை பெய்ததால் வெள்ளக்காடானது. மழைநீர் வடிந்த பகுதிகளில் சுகாதார பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள கூடுதல் தூய்மை பணியாளர்கள் தேவைப்பட்ட நிலையில், குறிப்பிட்ட சில நகராட்சிகளில் இருந்து கூடுதல் பணியாளர்களை அனுப்பி வைக்க நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இருந்து 20 தூய்மை பணியாளர்கள், ஒரு துப்புரவு பணி மேற்பார்வையாளர், ஒரு ஓட்டுனர் மற்றும் லாரியும் அனுப்பி வைக்க திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். 
இதைத்தொடர்ந்து 20 தூய்மை பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர் சக்திவேலு ஆகியோர் தனியாக ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்சில் புறப்பட்டு சென்றனர். மேலும் நிவாரண பணிகளுக்காக தேவையான தளவாட பொருட்களுடன் ஒரு லாரியும் புறப்பட்டு சென்றது. பணியாளர்களை நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியம், துப்புரவு அலுவலர் சோழராஜ் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

Next Story