ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது


ஈரோடு மாவட்டத்தில்  மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
x
தினத்தந்தி 13 Nov 2021 10:35 PM IST (Updated: 13 Nov 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 8-ம் கட்டமாக மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. ஆர்.டி.ஓ. பிரேமலதா ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டத்தில் 8-ம் கட்டமாக மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. ஆர்.டி.ஓ. பிரேமலதா ஆய்வு செய்தார்.
மாபெரும் தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவுதலை தடுக்கும் பொருட்டு, அனைவருக்கும் தடுப்பூசி எனும் இலக்குடன் இல்லம் தேடி தடுப்பூசி போடும் பணிநடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 8-ம் கட்டமாக மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை தமிழகம் முழுவதும் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உட்பட 436 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி போடும் பணி நடந்தது.
முகாமில் 58 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வழக்கம்போல் மாவட்டம் முழுவதும் நடந்த முகாமில், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
447 மையங்கள்
மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 447 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. மொத்தம் 61 ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 1,788 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 100 வாகனங்கள் முகாமிற்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஆர்.டி.ஓ. பிரேமலதா ஆய்வு
முகாம்கள் முறையாக நடப்பதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி அந்தந்த பகுதிகளில் அதிகாரிகள் முகாம்களுக்கு சென்று முறையாக தடுப்பூசி செலுத்தப்படுவதை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பி.பி.அக்ரகாரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா பார்வையிட்டார். இதுபோல் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் நடந்த முகாம்களை அவர் பார்வையிட்டார். அவருடன் ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Next Story