ஈரோட்டில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி வயலுக்குள் கவிழ்ந்தது
ஈரோட்டில் நிலக்கரி பாரம் ஏற்றி வந்த லாரி வயலுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
ஈரோட்டில் நிலக்கரி பாரம் ஏற்றி வந்த லாரி வயலுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
நிலக்கரி பாரம்
ஈரோடு கே.ஏ.எஸ். நகரில் தனியார் ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மில்லிற்கு தேவையான நிலக்கரி லாரி ஒன்றில் ஏற்றப்பட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த லாரியில் 10 டன்னுக்கும் மேலாக நிலக்கரி ஏற்றப்பட்டு டிரைவர் குமார் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார்.
ஈரோடு கே.ஏ.எஸ். நகர் அருகே ஓடும் காலிங்கராயன் வாய்க்கால் கரையின் மண் சாலையில் இந்த லாரி வந்து கொண்டிருந்தது. ஈரோட்டில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக வாய்க்கால் கரை மண் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக இருந்தது.
லாரி கவிழ்ந்தது
இதனால் லாரி டிரைவர் சகதியில் சக்கரம் சிக்காமல் இருக்க மண் சாலையில் காலிங்கராயன் வாய்க்கால் கரையின் ஓரமாக லாரியை ஓட்டி வந்தார். அப்போது லாரியின் சக்கரம் சேற்றில் சிக்கி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக டிரைவர் குமார் காயமின்றி உயிர் தப்பினர். எனினும் லாரியில் இருந்த நிலக்கரி முழுவதும் வயலில் கொட்டியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்து குறித்து விசாரணை நடத்தினர். மேலும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்கும் பணி நடந்தது.
Related Tags :
Next Story