ஈரோடு மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு
ஈரோடு மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
ஈரோடு மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் கொளாநல்லி பாம்பலங்காரசாமி கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
கோபி
இதேபோல் கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டன. இதில் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.
கொடுமுடி
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு குரு பெயர்ச்சியை முன்னிட்டு மூலவர் சன்னதியில் உள்ள தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரக சன்னதியிலுள்ள குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
பூஜைக்கு பிறகு கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டார்கள். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி ரமேஷ் செய்திருந்தார்.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே உள்ள ஏழூரில் தாட்சாயணி அம்மன் உடனமர் தம்பிரானீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று குருப்பெயர்ச்சியையொட்டி மகா கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், நவக்கிரக ஹோமம், குரு பிரீதி ஹோமம், மஹா பூர்ணாகுதி நடந்தது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான அரக்கன்கோட்டை, மோதூர், வாணிப்புத்தூர், டி.ஜி.புதூர், கள்ளிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story