திட்ட அறிக்கை தயாரிப்பதில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மும்முரம்


திட்ட அறிக்கை தயாரிப்பதில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மும்முரம்
x
தினத்தந்தி 14 Nov 2021 1:02 AM IST (Updated: 14 Nov 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மதுரை, 
மதுரையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரெயில்
மதுரை நகர் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. சிறு மழை பெய்தால் கூட ஆங்காங்கே ரோடுகள் காணாமல் போய்விடுகின்றன. ஆனால், அதிகாரிகள் மற்றும் அரசு ஆகியோர் ஒருவொருக்கொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே, சமீபத்தில் பெய்த தொடர் மழையால் மதுரை மாநகரில் உள்ள சாலைகளை தேடும் நிலை உள்ளது. இதனால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இடியாப்ப சிக்கலாக உள்ளது. இந்த சிக்கலை தீர்க்க மெட்ரோ ரெயில் திட்டம் மதுரைக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
கேள்விக்குறி
ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆராய்ந்து வந்தன. குறுகலான சாலை அமைப்பில் மெட்ரோ ரெயில் திட்டம் சாத்தியமா என்பது அதிகாரிகள் எழுப்பும் கேள்வியாக உள்ளது. மேலும், சிறு தூர இடை வெளியில் நகர்ப்பகுதிகள் அமைந்துள்ளதால் திட்டம் வெற்றி பெறுமா என்பதும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. பறக்கும் மேம்பாலங்கள் அமைத்து மெட்ரோ ரெயில் இயக்குவதா அல்லது பாதாள ரெயில்பாதை மூலம் இயக்குவதா என்பதும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
குறுகலான ரோடுகளில் பாலங்கள் கட்டுவதற்கே பல கோடி ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. அதைவிட கூடுதல் தொகை செலவழித்து மெட்ரோ ரெயில் இயக்குவது பொதுமக்களிடம் வரவேற்பை பெறுமா என்பதும் சந்தேகமாக உள்ளது. இந்த நிலையில், மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ரெயில் திட்டம்
தமிழக மற்றும் மத்திய அரசுகள் இணைந்து நடத்தும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில், மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்க திட்டங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும், திட்ட தயாரிப்பு நிறுவனத்தின் அறிக்கையில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story