கப்பலூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டுனர்கள் முற்றுகை
திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டுனர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டுனர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடிக்கடி கட்டணம்
திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. சுங்கச் சாவடியில் சர்வீஸ் சாலையை பயன்படுத்தி செல்லும் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு அடிக்கடி கட்டணம் கேட்டு வசூல் செய்ததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் ராஜ பாளையம் டி.கல்லுப்பட்டி வழியாக செல்லும் வாக னங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே சுங்கச்சாவடியை பயன்படுத்துவதால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப் பட்டது.
அடாவடி வசூல்
கடந்த சில தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தி யதில் திருமங்கலம் தொகுதியை சேர்ந்த உள்ளூர் வாகனங் களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் கடந்த இரு தினங்களாக டி.கல்லுப்பட்டி பகுதி வாகனங்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் அடாவடி வசூலில் ஈடுபட்டு வருவதால் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்தது. இதனை கண்டித்து உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று டி.கல்லுப்பட்டி வாடகை வாகன உரிமையாளர்கள், பொது மக்கள் இந்த பகுதியில் வாடகை வாகனங்கள் சொந்த வாகனங்கள் லாரிகளை நிறுத்தி சுங்கச்சாவடியில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதா அவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. இதன் இடையே வாகனங்கள் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story